* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  செல்லமானவளே......!
 


செல்லமானவளே........!
 





எல்லோருக்கும்
தை பிறந்தால்தான்
வழி பிறக்கும்



எனக்கு மட்டும் 
எப்போதும் தைதான் 
என் வழியே 
நீ  என்பதால்......





************








வந்துபோகும்  நாட்கள் போல்
வந்து போகிறது
நீ  என்னோடு இருக்கும்
ஒவ்வொரு  வருசங்களும்.....






************







நம் கல்யாண  வருசத்துக்காகவே
என் காதல்  வருசங்கள் ஒவ்வொன்றும்
நாட்களை ஓடவைத்துக் 
கொண்டிருக்கிறது......






***********







நான் எழுதாத கவிதை
நீ  என்பதிலும்
எனக்கு மகிழ்சியே



ஏனெனில்
என் கவிதைகள்தான்
யார் யாரோ  பெயர்களில்
உலகம் சுற்றுகிறதே......





**********






வருசத்தில் முதல்  நாளில்
மட்டும்  வாழ்த்த
ஆயிரம் உறவுகள்


வாழ் நாள் முழுவதும்
என்னை வாழவைக்க 
நீ.......






**********************************
************************
***************
*****
**
*



 
                                                                  -யாழ்_அகத்தியன்



 
 
 
  Today, there have been 60 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free