* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவியானவளே...[07]
 


கவியானவளே...[07]





கோயில் வாசலில் காத்திருக்கும்
பிச்சைக்காரனாய் காத்திருக்கிறேன்
உன் வீட்டு வாசலில் உன்
புன்னகைக்காய்.........






***********************







தயவு செய்து  இனி  நீ   குளிக்கும்போது
பஞ்சாயத்தில்  அறிவித்தல்  கொடுத்து
விட்டு  குளி        ஏனெனில்...
நீ குளிக்கும் போது  ஊர் கிணறு
எல்லாம்   வைற்றிவிடுகிறது.....






***************************







நீ படிக்கும் கல்லூரியில்
ஆண்களும் சேர்ந்துதான் படிக்கிறார்கள்
நீ வராத நாட்களில் மட்டும்தான்
பெண்கள் கல்லூரியாய் மாறுகிறது
........






***************************








நீ ஊர் கோயிலில் பாடிய
தேவாரத்தை கேட்டு
சாமியாக ஆசைபட்டதில்லை
நீ யாரோ ஒரு அனாதையின்
இறந்தவீட்டில் பாடிய
புராணத்தை கேட்டுத்தான்
அனாதையாய் இறந்து
போக ஆசைப்பட்டேன்.......






**************************





 

களைப்பில் எந்த இடத்திலும்
இளைப்பாறிவிடாதே அந்த இடத்தில்
இளைப்பாறியே களைத்து போகிறேன்
நான்.............





**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 148 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free