தொடாத சிணுங்கி.....!
உன் மெளனம் கூட ஆசைப்படுகிறது
நீ பேசுவதைப் பார்த்து கவிதையாக
பேச வேண்டுமென்று......
************
பூச் செடிக்கு பக்கத்தில் வைத்து
உன்னை படம் எடுத்ததில் உன்னைப்
பறித்த பூவின் புன்னகை தெரிகிறது.....
************
இரவு வந்தால் போதும் கவிதை
நேரத்துக்காய் காத்துக் கிடக்கிறேன்
வானொலிக்கு பக்கத்தில் அல்ல
என் கைபேசிக்கு பக்கத்தில்.....
************
உனக்கு பிடித்த எல்லாம்
எனக்குப் பிடிக்கும் உனக்கு
பிடித்த கவிஞர்களைத் தவிர......
************
வாசல் அழகுக்காய் கோலம்
போடுகிறாய் நீ கோலம்
போடும் வரைதான் அழகாக
தெரிகிறது வாசல்.......
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|