உன்னோடு பேசி
சிரித்த நாட்கள்..
உன் கைபிடித்து
திரிந்த நாட்கள்..
ஏன்
உன்மடியில் எனை
மறந்து தூங்கிய
நேரங்கள்..
இப்படியான என்
சந்தோசங்களை
எல்லாம்
காரமான
சில வினாடி
பேச்சால்
கரைத்துவிட்டாயே
பாவம் நான்
யாருமே எனக்கில்லை
என்ற உண்மையை
எத்தனை பேரிடம்தான்
ஏமாந்து தெரிந்து
கொள்வேன்.......
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|