தனக்காய் வாழ்ந்து மறைந்தவர்கள் கோடி எனக்கும் தெரியும் ஒரு நாள் பிரியும் உயிர் என்று நீ எங்களுக்காய் வாழ்ந்த உன் அயுளில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உனக்காய் வாழ்ந்திருந்தால் உனை நோய் கொண்டு போயிருக்காது அப்படியென்ன உன்னை மீறிய அக்கறை தேசம் மீதும் மக்கள் மீதும் உனக்கு....
உனக்கு தெரியுமா? ம்…. உனக்கெப்படி தெரியும் தேசத்தின் குரலாய் நீ வாழ்ந்தாய் என்று உனக்குத்தான் பட்டம் பதவி புகழ் எதுவுமே பிடிக்காதே..
நீ விழி மூடியதால் எங்கள் தேசம் ஊமையானதும் உலக தமிழ்மக்கள் கண்ணிரில் மிதப்பதும் உன் பிரிவைப் பாட வார்தைகள் தேடித் தேடித் பேனாக்களே தற்கொலை செய்து கொள்வதை எல்லாம் உனக்கெப்படித் தெரியும்...
நீதான் ஈழக்குழைந்தை கருவுற்ற காலம் முதல் பெறும் வருசம் வரை வாழ்ந்து விட்டு குழந்தையைப் பார்க்காமல் விழி மூடிவிட்டாயே இன்னும் கொஞ்ச காலமாவது உன் அயுளைமிச்சம் வைத்திருக்கலாமே உன் முத்தம் வாங்கும் பாக்கியத்தையாவது ஈழக் குழந்தை பெற்றிருக்குமே....
உன் பெயர் ஈழ வரலாற்றில் இடம் பிடித்தாலும் எங்கள் வரலாற்றில் உன் பிரிவு வெற்றிடமாவே என்றும் இருக்கும்....
உன் திறமையும் உன் வாழ்க்கையும் உன் வழி காட்டலும் உன் தத்துவங்களும் ஏன் உன் இறப்புக் கூடா என் போன்றவர்களுக்கு என்றும் பாடமாக இருக்கும்...
உன் பிரிவால் வாடும் உன் துணைவியுடனும் எம் தேசத்தின் கண்ணீரோடும் நானும் கலந்து கண்ணிரில் குளிக்கிறேன் உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்..
மனிதர்கள் மட்டுமே இறக்கிறார்கள்
மாமனிதர்கள் இறப்பதில்லை
அவர்கள் வரலாறாக என்றும் வாழ்கிறார்கள்
-யாழ்_அகத்தியன்