கவியானவளே...[11]
சிறு துளி பெருவெள்ளம்
உன் கூந்தல் துவட்டியபின்னும்
தூறும் துளிகள் எனக்கு.....
*******************
உன்னைக் காதலித்ததால் அல்ல
நீ என்னை காதலிக்காததால்தான்
ஆனேன் கவிஞனாய்......
*********************
விரும்பித்தான் காதலித்தேன் உன்னை
விரும்பாமல் காதலிதுக்கொண்டே
இருக்கிறது கவிதைகள் மட்டும்
என்னை.......
********************
நீ சூடும் பூவுக்கு எப்படி
கற்றுக்கொடுத்தாய்
நீ சிரிக்காத போதும் சிரிக்க.....
********************
உன் கண்களில் படித்துவிட்டுத்தான்
வெளியிடுகிறேன் என் ஒவ்வொரு
கவிதைகளையும் பல கண்களுக்காய்..
*******************
உன்னைக் காதலித்ததால்
தலைக்கனம் எனக்கு
நீ காதலிக்காததால்
தலைக்கனம் என்
கவிதைகளுக்கு....
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|