* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவியானவளே...[08]
 கவியானவளே...[08]

கோயிலைத்தான்  சுற்றிவருகிறார்கள்
உன்னைத் தருசிக்காத
பக்தர்கள் மட்டும்....


*********************************

உனக்காகவே நட்டு வைத்த  பூச்செடியில்
யார்யாரோ  பறித்து செல்கிறார்கள்
தங்கள் காதலியை  கண்டுபிடித்தவர்கள்........


*******************************என் காதல்  திருமணத்தில்  முடியவில்லைத்தான்
ஆனாலும்  மரணம்வரை வாழ்த்திருக்கிறது
இல்லையென்றால்  தற்கொலை
செய்திருப்பேனா...?


******************************* 

என்னைப்போல் யாரும் உன்
அமைதியை விரும்ப மாட்டார்கள்

உன் கீழ் உதடாய்  நீ மாறும்போதும்
உன் மேல் உதடாய் நான்
மாறும் வரையிலும்..............


*******************************
இன்றுவரை காதலோடு வரும்
எந்த பெண்களுடனும் நான்
உரையாடியதில்லை  காரணம்...
எனக்கே தெரியாத உனக்கு
துரோகம் செய்யக் கூடாது
என்பதால்..........


*******************************முடிந்தவரை உன்  வீட்டுக் கண்ணாடி
முன் நின்று என்னோடு உரையாடு
எத்தனை தடவை என்னை
பொறாமை படவைத்தது என்று
எனக்குத்தான் தெரியும்...........


*****************************ஒரு வார்த்தை கூட பேசாத  உன்னோடு
தினமும்  பேசிய களைப்பில்தான்
விடிகிறது என்  ஒவ்வொரு
தூக்கமும்...........


**********************************
************************
***************
*****
**
*

 

-யாழ்_அகத்தியன் 

 
 
  Today, there have been 23 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free