யாரிடம்.......?
தனிமை விட்டு இனிமை காண
இளமையோடு புதுமையாக
வந்தவளே....!
அருமையாக அறிமுகமானாய்
அவதரித்தேன் ஆண்மையோடு…
ஆகா
அருமையானவளே....!
உரிமையோடு உயிரோடு பேசி
பெண்மை ஒரு உண்மையென்று
பேச வைத்தவளே...!
கரம் பிடித்த கணப் பொழுதில்
கவலை வரினும் விலகிடேன்
என வினாவாக்கி
விடையளித்தவளே....!
உலகம் மறந்து
உனை நினைகிறேன்
என்ற உண்மை மட்டும்
உரைத்தேன்.
உன் மடியில் மரணிக்கும் வரை
மறந்தும் பிரிய மாட்டேன் என
எனை மயக்க வைத்தவளே....!
எனக்குள் நான் பிரிவெனும்
வார்த்தையை அயுள் வரை
சிறையிட்டுள்ளேன்
என்றேன்.....
தானோ பிரிவெனும் வார்த்தையை
தன் அகராதியில் இருந்து
எரித்து விட்டேன் தெரியுமா…?
என்றவளே........!
“யாரிடம் உன்
பிரியத்தை விற்று விட்டு
பிரிவை வாங்கி பிரித்தாய்
என் பிரியமான உனை
என்னிடம் இருந்து”.......
*****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|