* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  எனக்கானவளே…...!
 


எனக்கானவளே…...!
 


எல்லாருக்கும் பிடித்த
கவிஞனாக நான்

 
எனக்குப் பிடித்த
கவிதையாக நீ.....


************எனை வாசிக்கத்
தொடங்குகிறாய்
 

என் பிழைகளை
 நீக்கத் தொடங்குகிறது
காதல்.....

************


 
 நிலாவாகிறாய் நீ
வானமாகிறது காதல்
 

வானமாகிறாய் நீ
தேய்பிறையாகிறேன்
நான்......


************


 
 
நிலாவாய் வந்து
மறைகிறாய்
 

எனை காயவைக்க
உதிக்கிறது சூரியன்....


***********தேயத் தேய என்னை
எழுத  வைத்துக்
கொண்டிருக்கும் 
கவி நிலா நீ......


**********************************
************************
***************
*****
**
*

 


                                                                             -யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 22 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free