* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  பிரியுமா பிரியம்....!
 

பிரியுமா பிரியம்......!




என் ஞாபகங்கள்
எப்போதாவது வந்தால்
உன் குழந்தையை கிள்ளிவிடு
நான் உனக்காய் அழுவதும்
உனக்கு ஞாபகம் வரட்டும்..






*****







உனை பிரியமாய் பார்த்த
அதே கண்களால்த்தான்
உன் பிரிவையையும்
பார்க்க வைத்து
குருடாக்கினாய்
என் கண்களை..






*****






எனை சந்திக்காமல்  இருக்கத்தான்
இடம் பெயர்ந்தாய்
என்று சொல்லி இருந்தால்
நான்     உனக்காய்  என்  உயிரை
சாகடித்திருப்பேனே…






*****







என் கவிதைகளை  பிடித்த அளவுக்கு
உனக்கு என்னை  பிடிக்கவில்லை
அதனால்த்தானோ  என்னை  விட்டு
பிரிகிறது உன்னை  போல்
என் கவிதைகளும்.....






******






காதலுக்கு கண் இருக்கிறது
காதல் பிரிவுக்குத்தான்
கண் இல்லை
ஆமாம் நான்
பாக்கக் கூடியதாய்
நீ பாக்காமல்
பிரிந்து போனாயே..






****************************************
*******************************
*********************
***********
****
*




-யாழ்_அகத்தியன்

 


 
 
  Today, there have been 139 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free