* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  அவள் யாரோ..............!
 


அவள் யாரோ................!



 

அன்று உன்னை காதலிக்கும் போது
காதலுக்குப் பயப்பிட்டேன்
இன்று யாரையும் காதலிக்க
பயப்பிடுகிறேன்


உன்னை மாதிரியே
இருந்துவிடுவாளோ
என்று......





******************







நீ எது வாங்கிக் கொடுத்தாலும்
எதையாவது செய்துவிடுவேன்
பதிலுக்கு
"கடன் உறவை பிரிக்கும்"
என்பதால்


இன்று பிரிவை தந்திருக்கிறாய்
பதிலுக்கு என்ன செய்வேன்...?






*********************







தொலைந்த நாய்குட்டியைத்
தேடி விளம்பரப்படுத்தும்
மனசுள்ள உனக்கு


உன்னால் தொலைந்து போன
என்னை தேடிப்பார்க்கும்
கண்கள்கூடவா இல்லை.....






**********************







தினமும் நாட்காட்டிகளை
நானும் கிழிக்கிறேன்
உன்னால் வீணாய் போய்க்கொண்டிருக்கும்
நாட்களை பார்க்கப் பிடிக்காமல்.....





**********************






நீ பிரிந்த பின்னும்
உன்னை காதலிக்காமல்
இருந்ததில்லை நான்

கவிதைகள் வேண்டுமே
என் தனிமைக்கு.......






****************************************
****************************
***********************
**************
****
**
*




-யாழ்_அகத்தியன்





 
 
  Today, there have been 167 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free