உன்னை நான் ஆசைப்படுவதை
யாரிடமும் சொல்லிவிடாதே
நான் கதைக்காமல்
விட்டவர்கள் எல்லாரும்
என் மேல்
கோவித்துவிடுவார்கள்....
************
உன் மேலான என் ஆசையெல்லாம்
ஒன்று சேர்ந்து
என் ஆசையில் ஒன்றான என் கோவத்தை
உன்னிடம் காட்டவேண்டும் என்பதை
நிராசையாக்கிவிட்டது....
************
விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோவிக்க
விடுவதாயில்லை
உன்
விளையாட்டுத்தனம்.....
************
உன் வீட்டில் நீ
வாயாடியாம்
பொய்
சொல்கிறார்கள்
இதுவரை
உன் முத்தம்
வலித்ததில்லையே....
************
ஆசை இருந்தால்தான்
கோவம் வருமான்னு
தெரியாது
உன் மேல் கோவிக்கும்
போதுதான்
என் ஆசைகள் எல்லாம்
எழுந்து நிற்கின்றன....
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|