* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  எனக்கான கவி நீ...*1*
 


எனக்கான கவி நீ.........*1*




இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ....






******







யார் சொன்னது கண்பட்டால்
வாழமுடியாது என்று

என்னவள் கண்
பட்டதால்தானே

வாழ்கிறது
என் கவிதைகள்....






   ******







உன் மூக்குத்தி மின்னுவதில்
தெரிகிறது வானவில்லின்
அழகு.......






 ******







உன் பாதச்சுவடெங்கும்
தேங்கிய மழை நீரில்
உன் முகம்
காட்டுகிறது நிலா......






******







வாடாத உன் புன்னகை
கண்டு பொறாமைப்படுகிறது
பூக்கள் எல்லாம்......






******







உன் வருடலுக்காய்
ஏங்குகிறது
என் நரைமுடிகள்......






************************************************
*************************************
**************************
********************
*************
******
****
**
*



-யாழ்_அகத்தியன்





 

 
 
  Today, there have been 187 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free