* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  அருமையானவளே...…!
 



நீ
என்னைத்
தேடி வருகிறாய்



 நான்
 நீயாக மாறி
என்னைத்
தேடுகிறேன்.....






************







 நடைபயிலும்
குழந்தையாய்
வருகிறாய்


தாயாய் என்
கவனம் எல்லாம்
உன் மேல்....






************








 நீ
எங்கெல்லாம்
என்னைத் 
தேடுகிறாய்


என்பதை
ரசிப்பதற்காகவே


 
 நான் தொலைந்து
போகலாம்....





************







நீ
வந்தவுடன்
கை கொடுப்பதா
கன்னம் கொடுப்பதா


என்ற குளப்பத்தை
சாதுரியாமாய்
தீர்த்து வைத்தாய்


கைகூப்பி
வணக்கம் சொல்லி....






************








உன் தாவணிக்கு
எப்போது என் தாயின்
கைவிரல்கள் முளைத்தது



தடவியதும்
குழந்தையாய்
உறங்கி விட்டேனே...






**********************************
************************
***************
*****
**
*



-யாழ்_அகத்தியன்




 
 
  Today, there have been 149 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free