* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  அம்சமானவளே.....!
 

அவ்வளவு  ஆசையா
உனக்கு என் மீது....


கோவத்தில் நீ
சட்டி பானையோடு
சண்டைபிடித்தும்
இவ்வளவு ருசியா
சமைத்திருக்கிறாய்....

**********அமாவாசை விரதத்தில் நீ
"கா கா கா" என கரைந்து
கொண்டு வெளியே வருகிறாய்
உன்னைக் கண்டதும்
காகங்கள் குழம்பிவிட்டது
பெளர்ணமி விரதமோ என்று.....

*************இந்த மழை உடனே
நின்றுவிடும் பார்


எப்படித் தெரியும்


நீதான் குடை
விரித்துவிட்டாயே.....

************

[Vinnai%20Thaandi%20Varuvaayaa%20(4).jpg]
 

என் கவிதை படிப்பவர்கள் எல்லாரும்
என் காதலி கொடுத்து வைத்தவள்
என்கிறார்கள்...அதற்காகவாவது உன்னைக்
காதலிக்க வேண்டும்
எங்கே நீ....

************

என் கண்களுக்கு இமைக்க
மட்டும்தான் தெரியும்


உன் கண்களில் ஒன்றைக்கொடு
உன்னை மாதிரியே
உன்னை நான் இமைக்காது
பார்க்க வேண்டும்.......


**********************************
************************
***************
*****
**
*

-யாழ்_அகத்தியன்


 
 
  Today, there have been 24 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free