* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவியானேன் நான்....!
 


கவியானேன் நான்.......!





நீ சிரிக்க மறந்த உன்   புகைப்படம் மீது
ஒரு  கவிதை எழுதினேன்  என்ன அதிசயம்
உன்  கன்னக் குழிக்குள்ளே  காணாமல்
போனது என் கவிதை.....






****







தினம் ஒரு கவி எழுதி
உன்னைத் தேட விட்டேன்
எல்லாமே களைப்பில்
உன் ரசிகைகளைத்தான்
தேடித்தருகிறது...






*****








மது போதையிலும்
எழுதி முடித்தேன்
உன்    பெயரை
தலைகிழாக என்
கவிதையாய்.....






*****







என் கவிதைகள் எல்லாமே
எழுதிய என்னை விசாரிக்க
வைப்பதைவிட உன்னைத்தான்
அதிகம்  விசாரிக்க வைக்கிறது...






*****





எனக்கு பிறக்கும்  கவிதைகள்
எல்லாத்தையும்நீ     வாழவைக்க
ஆசைப்படுகிறாயா_ஒன்று செய்
என்னை உன்னோடு
கூட்டிச்செல்....






*****************************************
*******************************
*********************
***********
****
*



-யாழ்_அகத்தியன்

 

 
 
  Today, there have been 56 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free