* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  அடுத்த ஜென்மத்திலாவது.......!
 

 
 

நான் உன் கைக்கடிகாரமாய்
பிறந்திருக்கலாம் நீயாக எனை
பார்க்காமல்போனாலும்
யாரவது நேரம் கேட்டாவது
என்னை பார்க்க
வைத்திருப்பார்கள்.....


*************உன் கால்கொலுசாய் 
நான் பிறந்திருக்கலாம்
நீ நடக்கையிலாவது 
எனை இந்த உலகம்
திரும்பி பார்த்திருக்கும்.......


************உன் கூந்தல் சீவும் சீப்பாய்
பிறந்திருக்கலாம்
சிக்கல் எடுக்கும் ஞானியென
எனை உன்னோடு
வைத்திருப்பாய்........

************
நான் உன் நெற்றிப்பொட்டாக
பிறந்திருக்கலாம்
கொஞ்ச நேரமாக இருந்தாலும்
உன்னை பார்க்க வைத்த
பெருமையோடு உன் கையாலே
இறந்து போயிருப்பேன்......
என்ன செய்வது தெரியாமல்
இந்த ஜென்மத்தில் உனக்கு
பிடிக்காத காதலனாய் பிறந்து
விட்டேன்.......

************அடுத்த ஜென்மத்திலாவது
நீ போடும் செருப்பாக 
பிறக்க வேண்டும் நான்
அப்போதுதானே என்னை பிடித்து
உன்னை காதலிபவனுக்கு
அடிப்பாய்........


**********************************
************************
***************
*****
**
*-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 64 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free