என் பாடல்....{08}
காதல் மலரே காதல் மலரே
என் கவியின் முதல் வரியே
எங்கே பூத்தாய் நினைவிருக்கா..
என் கண்கள் இரண்டில்
கவியாய் பூத்தாய்
என் நெஞ்சம் எங்கும்
நிலாவாய் வளர்ந்தாய்
எந்தன் உலகத்தை
உன்னால் நிரப்பினாய்
உன்னைக் கொண்டே
என்னை வரைந்தாய்
உந்தன் வாழ்வில்
என்னை இணைத்து
கோடி சுகம்
காணவைத்தாய்....
அன்பே ஆருயிரே -என்
ஆசையில் வளர்ந்த கனவே
உன் கையில் என்ன காந்தமா
உன் கை பிடித்தால்
ஒளிமயமகுதே இதில்
என்ன மாயம் கண்ணே..
உன் கண்ணில்
எந்தன் விம்பம் தெரியுதே
அப்படியே நீ உறங்கிவிடு
இறந்து போவேனே
இன்பமாய் உன்னில்
நானே....
****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|