* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  எஸ்.எம்.எஸ் கவிதைகள்......!
 


எஸ்.எம்.எஸ் கவிதைகள்......!





எழுதிய கவிதைகளை
கிழித்துக் கொண்டிருக்கிறேன்
உன் பெயரைப் போல் அழகாய்
இல்லை என்பதால்......






************





[2.jpg]

உன் கவிதைகளை எல்லாரும்
படிப்பார்கள் நான் மட்டும்
பாடமாக்குவேன்.....





************





அமாவாசையிலும்
நிலாவோடு வாழ்ந்து
கொண்டிருப்பவன்
நான் மட்டும்தான்.....





************





[561769874_small.jpg]

உனக்கு மாத்திரை
குடிக்க பிடிக்காது
எனக்கோ
உனக்கு காய்ச்சல்
என்றாலே பிடிக்காது...





************





நீ
சிலையாய் நிற்கும்
புகைப்படத்தை பார்த்தே
சிலையாகிப் போனேன் நான்....






************





நீ என்னை காதலிப்பாய்
என்ற நம்பிக்கையில்தான்
உன்னை காதலித்துக்
கொண்டிருக்கிறேன்....






************







நீ என்ன செய்து
கொண்டிருப்பாய்
என்பதை
எண்ணிப்பார்பதையே
நான் செய்து
கொண்டிருக்கிறேன்...





************





இன்று என்னைவிட்டு
விடைபெற்று போகிறாய்
நாளைய உனக்காக
நான் காத்திருக்க
ஆரம்பிக்கிறேன்...






************





[2005112500090704.jpg]

நீ எனக்கு கிடைக்க வேண்டும்
என்பதற்காகவே உனக்கு
பிடிக்காததை செய்யக் கூடாது
என்பதில் மிகத் தெளிவாய்
இருக்கிறேன்....






************





உனக்கு பொய் சொல்வது
பிடிக்காது தெரிந்தும்
சொல்கிறேன்
பொய்சொல்லாத நீ
கிடைக்க வேண்டுமே
எனக்கு....






************





[Adhey-Neram-Adhey-Idam7.jpg]

உன் புகைப்படத்தில் நீ
யாரோடு நிற்கிறாய் என்பதே
என் கண்ணுக்குத் தெரியவில்லை
என் கண்ணுக்கு தெரிவது
நீ மட்டும்தானே.....






**********************************
************************
***************
*****
**
*






-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 52 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free