என் பாடல்....{01}
காதல் வந்தால் கவிவந்தால்
மிக அழகு இரவு வந்தால்
நிலவு பூத்தால் பேரழகு நீ வந்தால்
உன் நினைவிருந்தால் கோடியழகு
மலரும் பூ முகமே
உன் கண்கள் இமைத்தால்
உன் இதழ்கள் பிரிந்தால்
என் காயமாறுமே கண்ணே
கொஞ்சிடும் உலகமிது
கெஞ்சிடும் இதழ் எனக்கு
பக்கம் வந்துவிடு பாவையே
முத்தமிடு பாத்திருக்க
கொள்ளையிடு பள்ளியறை
நேரமிது படித்திட வா….
படிப்பிக்க வா..
அழகானா இரவிருக்கு ஆசையோடு
நானிருக்கு அள்ளிஎடு அத்தனையும்
பிச்செடு மூச்சுவிடு முகம் காட்டு
முத்தசுகம்தேடு முழுமையாய்
ஏந்திவிடு எனக்கென நீயிரு
விட்டது தொட்டது விடாதே
எட்டியதேது தட்டிக்கொடு எல்லாம்
கனிந்திருக்கு மெதுவா பறித்தெடு
கண்ணே கனியே களைக்காமல்
முத்தமிடு ஏ குயிலே
மயங்குமிசை கேள்.......
எடுத்திட வா கொடுத்திட வா
பெற்றிடவா வா வா
உச்சிமுதல் பாதம்வரை
முத்தமிட்டு நீந்தவா
உன்னில் என்னை
மூழ்கடிக்க வா வா....
புதுப் புதுசாய் பூப்பது எந்தசுகம்
அடைமழை பெய்கிறது வா நிலா
நனைந்திடுவோம் புதுக்கவியாய்
இணைந்திடு போர்வைக்குள் புழுவாய்
நெழிந்துவிடு ஏ ஏ ஏ நானிருக்கேன்
நாணத்தை களைந்துவிடு நமக்கினி
யாரும் வேண்டா.......
*****************************
*********************
************
******
***
*
-யாழ்_அகத்தியன்
|