உன் பொங்கல் கவிதை தித்திப்பதற்காகவே
சேர்த்தாயா உன் சக்கைரைப் பெயரை
இப்படி இனிக்கிறதே.......
தினம் நீ முறித்து தரும்
கரும்பின் சுவை அலுத்துவிட்டது
எங்கே கரும்பொன்றை கடித்துவிட்டு தா
உன் இதழ் தொட்ட சுவை
அறிய வேண்டும் நான்
நீ கண் மூடி வழிபட வழிபட
தன் நெற்றிக் கண்ணையும் திறந்து
பிரகாசிக்கிறான் சூரியபகவான்.....
சூரியபகவானுக்காய் நீ போடும்
நட்சத்திரக் கோலத்தோடு
உன்னை பார்க்கும்போது
நிலாக்கோலம்தான்
ஞாபகம் வந்தது எனக்கு......
எல்லாரும் கண்மூடி
ரசித்துக் கொண்டிருந்தார்கள்
நீ பாடிய தேவாரத்தை
நான் மட்டும் கண்திறந்து
கவனித்துக் கொண்டிருந்தேன்
எப்போ பிரியும் உன் இமைகள்
என்று........
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|