என் பாடல்....{11}
நீ மெல்ல பேசும் கண்களாலே கொள்ளை
போகும் இதயம் நானே உன்னோடு வாழத்தானே
உயிர் வாங்கும் மூச்சுத்தானே
நீ பார்த்தால் சிலையாவேன்
நெஞ்சுக்குள்ளே மலையாவேன்
நீ போனால் நிழலாவேன் உன்னோடு
உயிராவேன்
தூங்கும் என் தமிழை கிள்ளிவிட்டாய்
காதலை மையாக்கி கனவை மெய்யாக்கி
மெளனத்தாலே என்னை கவிஞனாக்கினாய்
தனிமை எனும் கோடையில்
காஞ்சு கிடந்தேன் என் தேடல்
எதுவென்று தெரியாமல் நானிருந்தேன்
தூறல் மழையாய் நீ வந்தாய்
நீயே என் தேவையென்று தேடவைத்தாய்
நீயே என் தேவையென்று தேடவைத்தாய்
உன் கைபிடித்து நடக்கையிலே என் பாதை
அழகாகும் உன் காதல் பார்வையாலே என்
கண்ணீர் வற்றிப் போகும்
உலகம் மறந்து நான் தூங்க உந்தன்
மடிபோதும் என்னை நான் பார்க்க
உன் கண்கள் இரண்டும் போதும்
உன் கண்கள் இரண்டும் போதும்.....
************************************************
*************************************
**************************
********************
*************
******
****
**
*
-யாழ்_அகத்தியன்
|