* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  உனக்காகவே நான்…...!
 

இரவு வந்தும் விடியப் போகிறது
இன்னும் தூங்கவில்லை  நான்


உணவுகள் படைக்கப் பட்டிருக்கிறது
இருந்தும் பசிப்பதற்காய் விரதம்
இருக்கிறேன் நான்.....






************







குழந்தையாய் நானிருந்து
பல ஆண்டுகள்  கடந்தபோதும்
மறுபடி குழந்தையாய்
உன்னைக் கேட்டு
அடம்பிடிக்கிறேனே  நான்.....






*************







என்ன செய்தாய் எனை
உன்னை காதலித்ததை மட்டும்தான்
நான்   செய்தேன்



யாருக்கும் செவி  சாய்க்காது
எப்படியோ இருந்த  என்னை



இருந்தால் இப்படித்தான்
இருக்க வேண்டும் என
என்னை செதுக்கிக்
கொண்டிருக்கிறாயே....






************







அன்பே ..
இப்போதாவது நீ 
கிடைத்திருக்கிறாய்  என  
ஒரு பக்கத்தில்  நான்
சந்தோசப்பட்டாலும்



மறுபக்கத்தில் உன் காதல் 
இதுவரை  நீ எங்கிருந்தாய் என
என்னைக் கவலைப்பட
வைத்துக் கொண்டுதான் இருக்கிறது...






**********************************
************************
***************
*****
**
*

 
 

  -யாழ்_அகத்தியன்


 
 
 
 
  Today, there have been 14 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free