* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  காதலர்தின கிறுக்கல்கள்.......!
 
 
காதலர்தின கிறுக்கல்கள்........!





நீ பேசாமல் நின்றாலும்
பேசிக்கொண்டேதானே இருக்கிறது
இன்னும் என்னோடு உன் கண்கள்..






***







இவ்வளவு கிட்ட வந்தபின்னும்
தூரமாய் நிக்கிறாயே பார்க்கிறவர்கள்
தப்பா நினைக்க போறாங்க
நாம் நல்ல நண்பர்கள் என்று..






***







உனக்கு முத்தம் கொடுக்க சொல்லி
சொன்னதே உன் கண்கள்தான் கொடுக்கும்
போதும் எதோ சொல்கிறதே
என்னவாக இருக்கும்?






***








நல்ல காலம் உன் கண் பேசும்
வார்த்தைகள் யாருக்கும் புரிவதில்லை
இல்லையேல் திட்டும் போதும் நான்
சிரித்துக் கொண்டே இருப்பதை
கண்டு பிடித்திடுவார்கள்..






***





உனக்கான கவி நடையில்தான்
என் எழுத்துக்கள் இடையில்
கிறுக்கல் ஆகிறது..






***







தயவு செய்து கோவத்தோடு
எனை விட்டு பிரியாதே
என் கோவத்தை யாரிடமாவது
காட்ட வேண்டி வந்துவிடும்..






***






நம் முதல் சந்திப்பில்
காதல் வரவில்லை
நம் முதல் பிரிவில்த்தான்
காதல் வந்தது ..






***







இன்று காதலர்தினமாம்
யாரையாவது
காதலிக்க விடுகிறாயா
நேற்றே வந்து விட்டாய்.....





*************************************
**************************
*********************
***************
***********
****
**
*





 

-யாழ்_அகத்தியன்

 
 
  Today, there have been 122 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free