* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  ஒரு நாள் ஒரு கனவு......!
 


ஒரு நாள் ஒரு கனவு.....!
மொழி தெரியா வயதில்
கண்களில் இதமாய்
தினம் நீ திரையானபோதும்
உனை நான் உணரவில்லை.......

************தலையணையின் துணையோடு
தனியாய் நான் தூங்கியபோதும்
வானவில்லாய் நீ வந்து
போனபோதும் உனை நான்
உணரவில்லை......


*************கறுப்பு வெள்ளையாய் என்
வாழ்வு ஆனபோதும் பல
வர்ணங்களாய் நீ வந்த
போதும் உனை நான்
உணரவில்லை......

************நூற்றுக்கணக்காய் நான் கவி
எழுதிய போதும் என் பெயரே
பிடித்த கவிதை என்று அழகாய்
கண்களில் முத்தமிட்ட தேவதையை
கனவே நீ.....


************காட்டிக் கொடுத்தபோதுதான்
உணர்ந்தேன் உன் சேவையையும்
என் பெயரின் இனிமையையும்........


**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 12 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free