* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவியானவளே… [04]
 


கவியானவளே… [04]

 


தன்னை அணைக்காமல் உன்னை
அணைத்துக் கொண்டதற்காய்
இன்னும் அழுதுகொண்டே
இருக்கிறது மெழுகுவத்தி......


********************


கால்களைக் காப்பாற்றித்
தந்த எங்களை கழட்டிவிட்டுவிட்டு
தங்களைக்  காப்பாற்றச் சொல்லி
கோயிலுக்குள் பக்தகோடிகள்.........


******************கழித்த கல்லும் அத்திவாரத்துக்கு
தேவைப்படும் கவனம் என்பதை
உனக்கு மாப்பிள்ளையானபோது
தெரிந்து கொண்டேன்...............


*******************என் கவிதைத் திருடியை
தாலி கொண்டு சிறைப்பிடித்தேன்
என் மனைவியாக.................


******************நான் எழுதிய கவிதை இல்லை
ஆனாலும் சட்டப்படி சொந்தமாக்கிக்
கொண்டேன்  உன் பெயரை.......

**********************************
************************
***************
*****
**
*-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 11 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free