* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இதமானவளே.....!
 
"நான்"
 நீயாகவில்லை உன்
பக்தனாகத்தான் நான்



ஏனெனில்
உன் முதல் சந்திப்பிலேயே
"நான்" என்ற என்  அகங்காரம்
என்னைவிட்டு பறந்து
போய்விட்டது....






************







காதலிக்கும்
இதயங்கள்தான்
என்றும் இளமையாக
இருக்குமாம்



வா  நம் முதுமையில்
 நமக்கென யாரும்
இல்லாமல் போனாலும்



நம் இதயங்களின்
குறும்புகளை சேர்ந்தே
ரசித்திடுவோம்....






************







அழகாக பூத்திருக்கும்
பூச்செடிகளைக் கண்டு நீ
ஆனந்தப்பட்டபோதுதான்



முதன் முதலாக நான்
கண்காணிக்காததால்
வாடிப்போன
பூச்செடிகளுக்காய்
கவலைப்பட்டேன்....






*************







உனக்காவே
பிறந்த நான்
இறைவனிடம்
வரம் கேட்டால்



நீ சூடும்
பூக்களைப்போல்



உன்னோடு வாழ்ந்து
உன்னில் இறந்துபோக
வேண்டுமெனக்
கேட்பேன்.....






***********







என் கவிதைகளை நீ
எடுத்து சேகரித்தபோதுதான்
தெரிந்து கொண்டேன்



 நான் மனம் வைத்துத்தான்
ஒவ்வொரு கவிதையையும்
எழுதுகிறேன் என்ற
உண்மையை.....






**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்



 
 
  Today, there have been 30 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free