* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  நீயும் நானும்....!
 


நீயும் நானும்....!





உண்மை சொன்னால் சிரிக்கிறாய்
பொய் சொன்னால் வெக்கப்படுகிறாய்
இதனால்த்தான் என் உயிர் எழுத்துக்களும்
அடிக்கடி மெய் எழுத்துகளாக மாறுகிறது.....






************







உன் வெக்கத்தை படம் பிடிக்க ஆசைதான்
என்ன செய்ய இதுவரை என்னை
எடுக்க விட்டதில்லை உன் வெக்கம்....






*********







நிச்சயமாய் உன் வெக்கத்தை யாரிடமும்
கற்றுக் கொண்டிருக்க மாட்டாய்
ஏனெனில் என்னிடம் மட்டும்தானே
நீ வெக்கப் படுகிறாய்.....






******************







நான் என்னைப் பற்றி சொன்னால்
ரசிக்கிறாய் உன்னைப் பற்றி சொன்னால்
வெக்கப் படுகிறாய் ஆகா உன் வெக்கத்துக்கும்
பழக்கி விட்டாயா உன் சுயநலத்தை....






*************







நான் மயிலே மயிலே என்று
அன்பாய் கூப்பிட்டாலும்
மயில் இறகு போட்டதில்லை
ஆனால் நான் ஆசையாய்
உன் பெயரை கூப்பிட்டால் போதும்
அடடா அழகாய் வெக்கப்படுவாய்....






******************








7ன்னைக் கண்டதும்
வெக்கப் படுகிறாய்
நீ வெக்கப் பட்டதும்
நான் காணாமல் போகிறேன்....






******************







என் காதுகள் பொய் சொல்லலாம்
என் கண்கள் பொய் சொல்லாது ஆமாம்
உன் வெக்கம் பேசியதில்லையே....






******************







உன் வெக்கத்தை பற்றி
கவி எழுதித்தர சைதான் ஆனால்
அந்தளவுக்கு நான் டித்தவன் அல்ல
வேணும் என்றால் சொல்
நீ வெக்கப் படாத நேரங்களை
கவிதையாய் ழுதித்தருகிறேன்....






*************************************
***********************
***************
********
*****
**
*






-யாழ்_அகத்தியன்



 
 
 
  Today, there have been 99 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free