உன் மனதில் பட்டதை
சொல்லிவிட்டாய்
இது தெரிந்தால்
என் மனம்தான்
படாது பாடு
படப்போகிறது
அதற்கு
உன்னை காதலிக்க
மட்டும்தானே தெரியும்
நீ கைவிட்டது
தெரியாதுதானே..
பரவாயில்லை நீ
விட்டுப்போனது என்னை
மட்டுமாக இருக்கட்டும்...
என் மனசாவது நீ
காதலிப்பதாய்
நினைக்கட்டுமே
அதாவது
அழாமல் வாழட்டும்...
இந்தக் காதலில்
மட்டும்தான்
ஏமாற்றியவரே
ஏமந்து போவது....
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|