* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என் பிரியமானவளே........!
 


என் பிரியமானவளே............!




என் பிரியமானவளே..!
என் உள்ளம் குளிருகையில்
உன்னை நினைத்தால்
என் உருவம் வேர்க்கிறது.

 

எதற்காக
உன் முகத்திரையை
என் கண்களில்
ஒட்டி விட்டுப்
போனாய்..?






*****





என்னவளே......! எப்படி
என் கவிதைக்குள்
ஏதேனும்
ஓரு வார்த்தையின்
வடிவில் ரகசியமாய்
வந்தமர கற்றுக்
கொண்டாய்..?






*****






உன் புன்னகையையும்
உன் பார்வையையும்
எப்படி உன்னால்
ஒரே அழகில்
ஒரே நேரத்தில்
புரிய முடிகிறது..?






*****





உன்னால் மட்டுமே
என் பேனாவை
பூட்டி விட முடியும்
என்று தெரிந்தும்
ஏன் பூட்டை மட்டும்
தொலைத்தாய்..?






*****





நெஞ்சுக்குள்
ஆசைகளை
வைத்துக் கொண்டு
நாக்கில் மட்டும்
எப்படி ஆண்மீகம்
பேசுகிறாய்..?






*****






உன் முதல் பார்வை
என்னைச் சுட்டது
உன் முதல் புன்னகை
என்னைக் காப்பாற்றியது.....






*****





பிரியமானவளே....!
என்னை மட்டும்
திருடி விடத்
தீர்மானமா...?



இல்லை
என்னையும்
கவிஞனாக்கத்
திட்டமா..?
என்ன செய்யப்
போகிறாய்..?



என்னாலும்
என் கவிதையாலும்
சென்று விட முடியாத
தேசத்துக்கு உன்னால்
சென்று விட முடியும்....






*****





நீ என்னை மறந்து விட
காற்றில்லாத கிரகத்துக்குச்
சென்றாலும் உன் காதல்
என்னைச் சுவாசித்து
அங்கும் உன்
உயிரைக் காப்பாற்றும்..!



காதலை மறைக்க
முயற்சிக்கலாம்
மறந்து விட முடியாது..






*****







பிரியமானவளே...!
என்னை மறந்து
நீ தூங்கினால்
கனவால் விழிக்க
வைப்பேன்...



நீ என்னை மறந்து
உன்னை மட்டும்
நினைத்தால்
நீ உச்சரிக்கும்
ஒவ்வொரு
வார்த்தைகளிலும்
என்னை ஞாபகப்படுத்தி
நினைவூட்டுவேன்...






*****





என் பிரியமானவளே....!
என்னை அழித்துவிட
உன்னால் முடியும்


 

என் காதலை
அழித்துவிட
யாராலும்
முடியாது..


 

 

மரணத்தைப்
போலவே
என் காதலும்
நிலையானது........!






****************************************
*******************************
*********************
***********
****
*




-யாழ்_அகத்தியன்

 
 
  Today, there have been 36 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free