ஈழத்து அகதியாய் நான்…[2]
அண்ணன் புலம்பெயர்ந்த
நாட்டில் சட்டி பானையோடு
சண்டை பிடிக்கிறான்
தம்பி உள்ளான்
சண்டைக்குள்
என்பதால்.....
*************
எல்லாம் இருக்கிறது புலத்தில்
எனக்கு எல்லாமுமான என்
குடும்பத்தை தவிர.......
*************
ஊரில் இருந்துவரும் கடிதம்
பிணப்பாரமாகவே வருகிறது
இறந்தவர்களின் செய்தியோடு
வருவதால்......
*************
புலத்தில் பட்டினி கிடந்து
உழைத்தும் என் குடும்பத்தின்
பசியைத்தான் போக்கமுடிந்தது
தூங்கவைக்க முடியவில்லை.....
*************
புலத்தில்
வயிறு முட்ட உண்டாலும்
வீசவில்லை அம்மாவின்
கைவாசம்.............
*************
நேத்தி வைத்த கோயிலிலும்
செல் விழுகிறது யாரிடம்
போவேன் என் வீட்டை
காப்பாற்ற..........
*************
அங்கு விழுந்தால்தான்
வெடிக்கும் செல்
இங்கு விழுகிறதா
என்றாலே இறக்கிறோம்......
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|