அன்னையர் தின கவிதை........!
உன்னைப் போல்
சமைக்க தெரியாது
என் மனைவிக்கு
ஆனாலும்
அவள் கைவிரலில்
உன் கைவாசம்
நீ பிடித்து தந்தவள்
அல்லவா........
******************
என்னை பாதுகாப்பாகத்தான்
வைத்திருக்கிறாள் என் மனைவி
ஆனாலும்
பயமாக இருக்கிறது உன்
கருவறையில் இல்லை நான்.....
****************
உன் மடியில் தூங்கும்
தூரத்தில் நானில்லை
என்பதால்த்தான்
என் மடியில் தூங்கிக்
கொண்டிருக்கிறது
எல்லா துக்கங்களும்....
***********************************************
****************************
*****************
************
*****
***
*
-யாழ்_அகத்தியன்
|