* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என் சைக்கிள் கடை....!
 



என் சைக்கிள் கடை..........!




நீ விருப்ப பட்டால் உன் சைக்கிளை
கை பிடிக்காமல் ஓடிக்காட்டுவேன்
நீ விருப்ப பட்டாலும்
உன்னை விட்டு ஓட மாட்டேன்....






*****





அடிக்கடி நீ என்
சைக்கிள் கடைக்கு
வரவேன்டும் என்பதற்க்காகவே
உன் சில நட்டுகளை
மட்டும் பூட்டி விடுகிறேன்...






*****





உழக்கினா ஓடும் சைக்கிள்
உன்னை நினைத்தால்
ஓடும் கண்ணீர்.....






*****





உன் சைக்கிளின் காயத்துக்கு
மருந்து கட்ட தெரிந்த‌ நான்
கொஞ்சம் படித்திருந்தால்
உன் காலின் காயத்துக்கும்
மருந்து கட்டி இருப்பேன்....






*****





என்னிடம் இருக்கும்
எந்த சாவியும்
பொருந்தவே இல்லை
உன் மனதின்
நட்டை இழக்க‌.....






*****





நீ கோப‌பட்டு என் சைக்கிள்
கடைக்கு வர மறுத்தால்
உன் கோபத்தை முட்களாக்கி
உன் பாதையெங்கும்
விதைப்பேன்.....






*****





உன்னை சந்திக்க
வைச்சதும் சைக்கிள்
உன்னை பற்றி பாட
வைத்ததும் சைக்கிள்...






*****





நீ பிரிந்து போக
காரணமாய் இருந்தது
மட்டும்
நான் ஒரு சைக்கிள்
கடைக்காரன் என்பதுதான்.....






****************************************
*******************************
*********************
***********
****
*







 யாழ்_அகத்தியன்

 
 
  Today, there have been 96 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free