* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவியானவளே… [03]
 


கவியானவளே… [03]





கனவில் வந்தவளைக்
கைகூப்பி வரவேற்றேன்
தூக்கத்தைத் திறந்து....




***************************






என் கவிதைத் தலைப்பை
படித்துவிட்டு பொறாமைபட்டார்கள்
உன் பெயரை தெரிந்தவர்கள்
மட்டும்..............




***********************






கையெழுத்து அழகானால்
தலைஎழுத்து நல்லா இருக்காதாம்
உண்மையானது உன்னால் 
அழகான என் கையெழுத்தால்......




**************************






இடமில்லாமல் என்னை
இறக்கிவிட்டுப் போன
படகில் ஏறிப்போனது
என் காதல்.......




***************************






நீ என்னைப் பிரிந்ததை
யார் கேட்டாலும்
நானாக பிரிந்தேன் என
சிரித்தபடி சொல்லிவிட்டு
தூக்கத்தில் அழுகிறேன்.....





**********************************
************************
***************
*****
**
*





-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 168 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free