* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  காதலான கவிதைகள்...…!
 


காதலான கவிதைகள்…!




[santhosh2iu7.png]
 
நீ என்னோடு வருகையில்
காற்று என்னைத் திட்டுகிறது


நீ தனியாய் போகையில்
காற்றை நான் திட்டுகிறேன்


பார் காற்று புயலாய் மாறி
உன் ஆடை களைய
முயற்சி செய்வதை......





***********






பூக்கள் நிறைந்த
தோட்டத்தில் நடக்கையிலும்
ஏதாவது ஒரு முள் குத்திவிடுகிறது
உன் இதயத்தை ஞாபகப்படுத்த.....





************





[Adhey-Neram-Adhey-Idam4.jpg]

இரவிலும் தூங்க விடாததுக்கும்
சேர்த்து பகலிலும் தூங்குகிறது
என் கைபேசி நீ என்னை
தொலைத்ததால்........






*************







உன்னைச் சுற்றுவதால்
நீ கிடைக்காமல் போனாலும்
உன் நினைவாவது கிடைக்குமே
அது போதும் எனக்கு நான்
யாரையும் சுற்றாமலிருக்க......





************







உன்னில் நான் இல்லாத 
இடத்துக்கு மேல இன்றும்
தொங்குகிறது என்
இதயச் சங்கிலி........






**********************************
************************
***************
*****
**
*


-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 32 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free