இனியவளே....! {04}
இனியவளே…
என் இறந்த காலம் மிக சோகமானது
அதை மறக்க வைக்க இறைவன் கொடுத்த
நிகழ்காலம்தான் நீ எனக்கு.......
**********************************
நான்பொய் சொல்ல
விரும்பவில்லை
உன்னை ஞாபகப்படுத்த
உன் புகைப்படம் வேண்டாம்
உன் புன்னகையும் வேண்டாம்
உன் கவிதையும் வேண்டாம்
ஏன் உன் நினைவும் வேண்டாம்
உன்னை ஞாபகப்படுத்திக்கொண்டே
இருக்க எதுவாலும் முடியாது
உன்னைத்தவிர எனக்கு.....
*********************************
இதுவரை நான் அசிங்கமானவன்
என்று சந்தோசப்பட்டதில்லை
நீ அழகானவன் என்று
சொல்லும் வரை....
***********************************
நான் உன் கவிதையின் ரசிகன்
அதனால்தான் சொல்கிறேன்
இன்றே இறந்து போக தயார்
அடுத்த நொடியே நான் உன்
பேனாவாக பிறப்பேன் என்ற
உறுதி மொழி கிடைக்குமென்றால்.......
*****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|