* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  அழகானவளே.....!
 

இனி வெக்கப்படும்போது
என்னை உன் கைகளில்
ஏந்திக்கொள்
 நீ
முகத்தை பொத்திய பின்
வெக்கப் படுவதையும்
 நான் ரசிக்க வேண்டும்....

************பேசாமல் நான் சிவப்பு
நிறத்தில் பிறந்திருக்கலாம்
இப்படி நீ முத்தம் கொடுத்த (கடித்த)
இடத்தை கஸ்ரப்பட்டு
மறைக்காமல் இருந்திருப்பேன்....


************ஒன்றை இழந்தால்தான்
ஒன்றை பெறமுடியும்
என்பது உண்மைதான்
எப்படி...
உன்னிடம் முத்தம்
பெறவேண்டும் என்பதற்காய்
என்னை நானே கிள்ளிவிட்டு
 நீ கிள்ளியதாய் பொய்
சொல்கிறேனே...


************என்னைக் காதலிக்க எங்கும்
போகாதே உன் நிழலிடமே
கற்றுக்கொள்..
நீ பார்க்காமல்
போனபோதெல்லாம்
என்னை தடவிச்சென்றது
அதுதானே....


************
 நீ
தாமதமாய் வருபதைக்கூட
என்னால் திட்ட முடிவதில்லை
திட்டினால் அவசரமாய்
போய்விடுவாயோ என்று.....


**********************************
************************
***************
*****
**
*


-யாழ்_அகத்தியன்


 
  Today, there have been 2 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free