* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என் காதல்.....!
 

என் காதல்......!






காதல் வந்த பிறகு
கழுவியும் போகாத என்
நிறத்தோடு எனக்கே
என்னை பிடித்திருக்கிறது....






************







கல்லில் கடவுள்
தெரிவது சாத்தியம்
என்றால்
எனக்கு நீ தேவதையாய்
தெரிவது சாத்தியமே.........





************







என் தனிமையே
உன் பிரிவை
அடிக்கடி
ஞாபகப்படுத்துகிறது...






************







நீ வாழும் தொலைவில் இருந்துதான்
என் காதல் தேசம் ஆரம்பிக்கிறது....






************







என்னைவிட அழகுதான் நீ
உன்னைவிட அழகு
என் காதல்.....






************








கரைந்த துளியை
தேடும் புல்(ப்) போல்
தேடுகிறேன் உனை


நீ
வேரோடு கலந்ததை
மறந்து......






************







அவளால்
மறுக்கப் பட்ட
என் காதல்


இன்னும்
ஞாபகம் இருப்பதால்


என் கவிதைகளை
நான் படித்து
பார்ப்பதேயில்லை.....






************







நீ என்னை வெறுத்த பின்னும்
உன்னை வெறுக்காத என் காதலை
இன்றும் காதலிக்கிறேன்...






*********************************

**************************
******************
***************
*****
***
*



 

-யாழ்-அகத்தியன்


 
 
 
  Today, there have been 128 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free