* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  உன்னதமானவளே.....!
 

நீ கேட்கும் போதெல்லாம்
என் கவிதைகளை
தந்துகொண்டே இருக்கிறேன்

ஏதாவது ஒரு  கவிதையை
படித்துவிட்டாவது என்னைக்
கேட்பாய் என்ற நம்பிக்கையில்......


************
 

தினமும் நீ என்னை பார்த்தும்
பாராமல் போகிறாய்
அதையும் பார்ப்பம் பாரமல்
பார்க்காம எத்தனை மட்டும்
பார்க்கப் போறாயென்று......


************சொன்னா கேக்க மாட்டிங்களா
என்றதை கேக்கிறதற்காகவே
தினமும் மழையில் நனைந்து
வரலாம்.......


************ஒரு இரவாவது நீ தூங்குவதை
தூங்காமல் பார்க்க வேண்டும் என்ற
என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை
ம்ம் கொடுத்து வைத்த கணவன் நான்
கொடுத்து வைக்கப் போகிற அம்மா நீ....


************நான் தொடர்ந்தும் உனக்காகவே
கவிதை எழுத வேண்டும் என்பதில்
எவ்வளவு ஆசை உனக்கு....என் கவிதையை படித்துவிட்டு
யாரோ எழுதிய கிறுக்கலுக்கு
வாழ்த்துகிறாயே......


**********************************
************************
***************
*****
**
*


-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 25 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free