நிலவானவளே.............!
நீ
என்னைக் காதலிக்கவில்லை
என்ற சொல்லை எறிந்தால்
பதிலுக்கு உனக்கு மட்டும்
கவிதைகளை தந்து கொண்டே
இருக்கும் மரம் நான்......
***********************
நான் மழைக்கு பள்ளிக்கூடம்
ஒதுங்காததில் கவலைப்பட்டது என்றால்
அது உனக்கு கவிதை எழுத துடித்த போது
மட்டும்தான்....
***********************
நல்ல வேளை நான் கவிதை எழுத
முயற்சிக்கவில்லை
அப்படி எழுதியிருந்தால்
உன்னை விட அழகான கவிதையை
என்னால் எழுதியிருக்க முடியாது....
***********************
நீ கட்டி அணைத்தால்
தூங்காது தலையணை
நான் கட்டிப்பிடித்தால்
தூங்காது பேனா......
***********************
உன்னைப் பார்த்து யார் யாரெல்லாம்
பொறாமைப் படுகிறார்களோ
தயவு செய்து அவர்களைப் பார்த்து
நீ கோவித்து விடாதே அவர்கள்தான்
என் கவிதைகளின் ரசிகர்கள்....
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|