எறும்பு ஊர கல்லும்
தேயுமா என்பது தெரியாது
உன் மனக்கல் மீது
யார் ஊர்ந்தாலும்
அவர்கள்தான் தேய்வார்கள்
என்பது மட்டும்
தெரியும்.....
************
என் கவிதைகளின்
எழுத்துப் பிழைகளை
நீ சரி செய்வதைவிட
மிக அழகு உன்
உடையை நீ சரி
செய்வது.....
************
நீ
ஆசைபட்ட பொருட்கள்
எல்லாவற்றையும் வாங்கி
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
பத்திரப் படுத்தியதற்காகவாவது
என் மேல் உனக்கு
ஆசை வந்துவிடும் என்ற
நம்பிக்கையில்.....
**************
குழந்தையை தூக்கி கொஞ்சுகிறாய்
குழந்தையோ உன்னைக் கொஞ்சுகிறது
குழந்தை நீ தூக்கியதற்காய்.....
************
பூ
செடியை
சுற்றுமா என்ன..?
நீ
துளசிச் செடியை
சுற்றும்போது
என்னை நானே
கிள்ளிப்
பார்க்கிறேன்....
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|