* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இரக்கமானவளே......!
 

உனக்கென்ன நீ தூங்கிவிட்டாய்
நான்தான் நீ தூங்கும் அழகை
கற்பனை பண்ணிப்பார்த்தே
என் இரவை நீளமாக்கிக்
கொண்டிருக்கிறேன்......





************







அப்படி என்னத்தை
உன்னில் கண்டதோ
என் இதயம்



உனக்கு பதிலாய்
எதைக் கொடுத்தாலும்
என் மேல்
தூக்கி எறிகிறது....






************





Edge Couple Love Hug

கவிதைகளை நான் பெற்றதில்
பதிலுக்கு கவிதைகள்
செய்த நன்றிக்கடன்
உன்னை எனக்கு
தேடித்தந்ததுதான்.....






************






தூங்குவதற்கு இமை
மூட வேண்டும் என்பதையே
மறக்கடிக்கிறது
உந்தன் நினைவு.....






************







என் வேதனை எல்லாமே
உன்னைக் காதலிக்க
எனக்கு ஒரு இதயம்
போதாது என்பதுதான்......






**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்




 
 
  Today, there have been 79 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free