* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கடைசி ஆசை......!
 


கடைசி ஆசை....!

அன்பே....ஏன் பிரிந்தாய்?

 
நம் பிரிவை உயிர்
மட்டும்தான் பிரிக்கும்
என்றுதானே நானிருந்தேன்......


 
எப்படி பிரிந்தாய்?

 
 
நீ இல்லாமல்
வாழத்தெரியாத  நான்...

நீ இருந்தும் இல்லாமல்
எப்படி வாழ்வேன்........


 
 
 
சொல் கண்ணே
சொல்....
*****************

நீ
இல்லாத உலகத்தில்
நான் பிணமாய்
வாழ்வதைவிட...


நீ
இருக்கும் உலகில்
நான் கல்லறையாய்
வாழலாம்.......
எங்கே நீ சொல்
அன்பே சொல்..

***************** 

உனக்கான என் காதல்
மரத்தில் இருந்து
தினமொரு கவியிலையாய்
விழுந்து கொண்டிருக்கிறது
என் கண்ணீர் எனும்
மழையாலும்
உன்
நினைவெனும்
புயலாலும்......

வா அன்பே
வா...

*****************
நீ
என்னை வாழ
வைக்க வேண்டாம் 
வாழ விடாமல் வைத்துவிடு
அது போதும்
உனக்காய் வாழ்ந்து
உன்னால் இறந்தேன்
என்பதே என்
வாக்குமுலமாய்
இருகட்டும்........

வா அன்பே
வா....**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 59 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free