* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  காத்திருப்பு.........!
 


 காத்திருப்பு.........!





உனக்காய் காத்திருந்து
நிலவுகூட
பகலில் வந்து விட்டது
பகல் நிலவாய்
இன்னும் நீதான்
வரவில்லை.....






****






காக்க வைப்பதில்
உனக்கு அவ்வளவு சுகமா
அதைவிட சுகம்  உனக்காய்
காத்திருப்பதில்.......






****







உன் வருவுக்காய்
எதிர் பார்த்திருந்தால்
நீ வரும் பாதைகூட
உன்னை போல்
அழகாக வெக்கப்படுகிறது..






****





உனக்காய் காத்திருந்து
இறந்துபோக ஆசைதான்
உனக்காக கவிதைகள்
பிறக்காமல் போகுமென்றால்..






****



உனக்காய் காத்திருந்து நான்
வாடிப் போகவில்லை
என் கவிதைகளுக்குத்தான்
தாடி முளைக்கிறது.....




****







நீ தாமதமாய் வரும்வரை
எப்படி சமாளிபேன் என்
கவிக்குழந்தைகளை
ஒவ்வொன்றும்
அம்மா வேணும் என்கிறது..






****





 
என்னைக் காக்க வைக்க
வேண்டும் என்பதற்காக
தயவு செய்து வராமல்
விட்டு விட்டாதே
என் பேனா
ஒரே நாளிளே
இறந்து போய்விடும்..






****





உன்னைக் கண்டால்போதும்
எனக்குமுன் ஓடி வரும்
என் கவிதைகள் எங்கே
உன்னைக் காணவில்லை இன்னும்
என் பின்னால் என் கவிதைகள்..






***







என் கவிதை கேக்கவே நீ
தாமதமாய் வருவாய்
அதற்காகவே வந்துவிடும்
ஆயிரம் கவிதைகள்..






***







நீ இனி வரவேமாட்டாய்
என்று முடிவெடுத்தபின்தான்
தினம் வருவாய்
இன்று முடிவெடுத்தபின்தான்
காத்திருக்கிறேன்
வரவே மாட்டாயா.....






***







உனக்காய்க் காத்திருக்கும்
என் நேரம் முடிந்துவிட்டது
இனியும் காத்திருந்தால்
அது என்
கவிதைகளுக்காகத்தான்.....






*************************************
**************************
*********************
***************
***********
****
**
*


 
-யாழ்_அகத்தியன்
 

 
 
  Today, there have been 17 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free