எந்தக் கவிதையும்
என்னவள்போல்
எழுத வைத்ததில்லை.....
***************
என்னவள்போல் எந்தக்
கவிதையும் என்னைக்
கவிஞனாக்கியதில்லை.....
***************
அவள் தேடிய வாசகன் நான் என்பதைவிட
எனக்கான கவிதை அவளே என்பதே
மிகச் சரியானது......
*************
என்னால் எழுதவே முடியாத கவிதை
அவள் என்றாலும்
அவளால் வாசிக்கப்படும் கவிஞன்
நான்........
***************
எந்தக் கவிதைக்குமான
சொந்தக்காரன் நானல்ல
எனக்கேயான கவிதையை
சொந்தமாக்கிய கவிஞன் நான்....
************************************
***********************
*****************
********
****
**
*
- யாழ்_அகத்தியன்
|