என் நீயும்...... என் கவியும்......!
கோவத்தில் நீ என்னைக்
கண்டும் காணாமல் போவாய்....
கோவத்தில் கவிதையோ என்னைக்
காணாமல் கண்டு போகும்....
**********
என்னை நான் மறக்க
இருவர் போதும்
ஒன்று - நீ
மற்றொன்று - கவிதை...
**********
என் கிறுக்கல்கள் எல்லாம்
கவிதையானது
உனக்கு பொய்கள்
பிடித்தபோது...
****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|