* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கோவப்படும் கோவங்கள்..!
 கோவப்படும்     கோவங்கள்.......!
sweetmiche662xq.jpg

என்னைக் கோவப் படுத்தியதுக்காக
உன் மேல் நீ கோவப்படுகிறாய்
உன்னைக் கோவப் படுத்தியதுக்காக
என் கோவத்தை வெறுக்கிறேன்.......


*******************

என்னால் உன் கோவங்களை
புரிந்து கொள்ள முடிவதில்லை
ஒரு விதத்தில் அதுவும்
உதவி செய்கிறது எனக்கு
ஆங்கிலம் புரியாததால்....

********************


உன் கோவத்தை  என் மேல்
இறக்கி வைத்துவிட்டு போய்விடுவாய்
பாவம் நான்  படாத பாடுபடுகிறேன்
உன்  கோவத்தை யாரிடமாவது
இறக்கி வைக்க....


********************


உன் ஆசையை காட்டுவதற்காக
இப்பிடியா வார வாரம் என்கூட
கோவம் போட்டு
பேசாமல்  விடுகிறாய்
சில தினங்கள்....


*********************

உன்னை அழகாய் எனக்கு காட்ட
விரும்புகிறாய் என்றால் சொல்லி இருக்கலாமே 
உனக்கு  விரும்பிய  அழகுசாதனப் பொருட்கள்
வாங்கி தந்திருப்பேனே  அதை விட்டுட்டு ஏ
ன் என் மேல் அடிக்கடி கோவித்துக் காட்டுகிறாய்....


*******************உன் கோவங்களை விதைப்பதற்கு
என் மனசா கிடைத்தது பாவம்
அது வளர என் கண்ணிரைக்
கடன் கேக்கிறது.....


********************இதுவரை நீ என்னோடு  கோவித்தது
எனக்கு  சந்தேகம் வந்ததில்லை
கடைசியாக நீ என்னோடு 
கோவப்பட்டதில்தான் சந்தேகம்
ஏனெனில் உன் கோபத்தை நான்
கவிதையாக்கி இருக்கிறேனே........


**********************************
**************************
***************
**********
***
*-யாழ்_அகத்தியன்

 

 
  Today, there have been 50 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free