அவசரமாய் நான் வீதி கடக்கையிலும்
நீயே நினைவுக்கு வருகிறாய்
எப்போதோ உன்னோடு வீதி கடக்கையில்
நீ குட்டுவைத்து குழந்தைபோல்
எனை கூட்டிச் சென்றாயே...
என்னை எழுத வைப்பதற்காகவே
கவிதையாய் படுத்துக்
கிடப்பாய் எனக்கு முன் நீ....
நீ எழுதிய முதல் கவிதை நான்
ஒவ்வொரு பத்திரிகை குப்பைத்
தொட்டியிலும் கிழிந்து கிடக்கிறேன்..
உன்னை விட தொட்டால் சிணுங்கி
பரவாயில்லை
நீ பேசினாலே சிணுங்கிறாயே...
பெண்களுடன் சுற்றி இருக்கீங்களா
என்று கேக்கிறாய் -இல்லையென்றால்
நீ எனக்கு தேவதையாய்
தெரிந்திருக்கமாட்டாய்..
*************************************************
*********************************
*************************
*******************
******
****
**
*
-யாழ்_அகத்தியன்
|