* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  தாயுமானவளே......!
 
நீ வரும்வரை  என்னை
எவரும் கவனிப்பதில்லை 
உன்னோடு இருக்கையில்
கவனிக்காததென்று  எதுவும்
இல்லை
அதற்காகவாவது  உன்னோடு
கூட வரலாம் நான்......






*************






 
உன்னோடு பார்க்கவேண்டிய 
உலக அதிசயங்கள்  எல்லாமே
எங்கே என் அதிசயம் என்று
கேக்கிறது  அதற்கு எப்படித்
தெரியும்  உன்னை நான்
சுற்றிச் சுற்றி ரசிப்பது.....






************







தினம் நீ சாய்ந்து தூங்கும்
என் தோல்களை
தடவித் தடவித்தான்
என்னையே நான் தூங்க
வைக்கிறேன்.....






*************







உன்னை நிற்க வைத்து
யார் புகைப்படம் எடுத்தது
அதை பார்க்கும் போதெல்லாம்
எனக்கல்லவா கால் வலிக்கிறது..





*************







நீங்க தூங்கவே மாட்டிங்களா
என்கிறாய்  நான் தூங்கினால்
என்னை உன் மடியில் இருந்து
தூக்கிவிடுவாயே......





**********************************
************************
***************
*****
**
*



-யாழ்_அகத்தியன்




 
 
  Today, there have been 112 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free