காதலை
கண்களில் வைத்து
உறங்கி விடாதீர்கள்
இதயத்தில் வைத்து
எப்போதும் இயங்க
வையுங்கள்......
************
மலிவான பொருள் கூட
விலைமதிப்பற்ற பொருளாவத
காதலர்கள் பரிமாறும்
பரிசுப் பொருள்களில்
மட்டும்தான்......
***********
உன்னைப் பார்த்து
காதல் வரக் கூடாது
உன் காதலைக் கேட்டு
காதல் வர வேண்டும்.....
************
குழந்தைகளுக்கு புன்னகை
அழகென்றால்
காதலர்களுக்கு
குழந்தைத்தனமே
அழகு....
***********
ஒரு பூவால்
இருவரை மலரவைக்க
முடியும் என்றால்
காதலர்கள் கரம் சேரும்
பூக்களால் மட்டும்தான்....
***********
காதலை பொழிந்து
கொண்டேயிருங்கள்
காதலித்தவள்(ர்) உங்களை
காயவைத்துக் கொண்டே
இருந்தாலும்.....
************
எந்த இழப்பும்
சந்தோசத்தை
கொடுப்பதில்லை
காதலிப்பவர்களிடம்
உங்களை நீங்கள் இழந்து
கொண்டிருப்பதைப் போல்....
***********
காதல் ஒரு
அழகான மதம்
அதில் மூட
நம்பிக்கையே
வேதம்....
**********
மொழிகளை அழகாக்கிக்
கொண்டிருப்பவை
காதல் கவிதைகள்
மட்டும்தான்......
************
எதுவெல்லாம்
உன் உரிமைகள்
என்பதை தெரிந்து
கொள்வதற்காகவாவது
காதல் செய்.........
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|